முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-20 19:08 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை இலுப்பைக்குடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம ஆசாமி ஒருவர், மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கு தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அகிலாண்டம் அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்