கீழ்வேளூர் ஒன்றியம் குருமணாங்குடி ஊராட்சி மெயின் ரோட்டில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்த வயலில் உள்ள 2 பனைமரத்தில் விஷவண்டுகள் (கதண்டு) கூடு கட்டி இருந்தது. இந்த விஷவண்டுகள் அந்த பகுதியில் செல்பவர்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கீழ்வேளூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சுப்பையன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பனைமரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயிட்டு அழித்தனர்.