விஷ கதண்டுகள் அழிப்பு

திருநகரி ஊராட்சியில் விஷ கதண்டுகள் அழிப்பு

Update: 2023-09-10 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் பாதி, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் வேதராஜபுரம் ஆகிய பகுதிகளில் விஷ கதண்டுகள் கூடுகட்டி பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், பூம்புகார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பூம்புகார் தீயணைப்புநிலைய சிறப்பு அதிகாரி துரைமுருகன் தலைமையில் ஊழியர்கள் மேற்கண்ட இடங்களில் கூடு கட்டி இருந்த கதண்டுகளை அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்