கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Update: 2022-10-06 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-, ம் வகுப்பு வரை படிக்கும் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் சிறுபான்மையினர் இன மாணவ-மாணவிகளுக்கான பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவ-மாணவிகள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்