தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-30 14:20 GMT

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு எல்.எல்.பி சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 19ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்