தனியார் கல்வி நிறுவனங்கள் நகரமைப்பு அனுமதிபெற காலஅவகாசம் நீட்டிப்பு -கலெக்டர் தகவல்

தனியார் கல்வி நிறுவனங்கள் நகரமைப்பு அனுமதிபெற காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-15 09:28 GMT

தனியார் கல்வி நிறுவனங்கள் நகரமைப்பு அனுமதிபெற காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ஆன்லைனில் 2018 ஜூன் 14-ந் ேததி முதல் 2018 செப்டம்பர் 13-ந் தேதி வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு ரிட் மனுக்கள் மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு 10.02.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி 22.03.2021 முதல் 4.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும், ஆறு மாத காலம் நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால்நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம்.

பதிவு செய்யலாம்

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழக்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்