அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் வரன்முறை செய்ய காலநீட்டிப்பு
ிருவாரூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் வரன்முறை செய்ய காலநீட்டிப்பு :கலெக்டர் சாருஸ்ரீ தகவல்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன் முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு, எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.