நெல்லை மாநகரில் தடை உத்தரவு நீட்டிப்பு
நெல்லை மாநகரில் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகரில் நேற்று முதல் வருகிற 17-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகமாக கூடுதல், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.