மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-03 19:42 GMT

பேட்டை:

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகஸ்டு 2023-ம் ஆண்டிற்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது தொழிற்பிரிவுகளில் இன்னும் பயிற்சியாளர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக இருப்பதால் வருகிற 15-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சியில் சேர விரும்புவோர் இந்நிலையத்திற்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் (இருந்தால்), ஆதார் கார்டு, அனைத்து சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5) ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி காலத்தில் தமிழக அரசால் மாதம் ரூ.750 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சியின்போது மடிக்கணினி, சைக்கிள், வருடத்திற்கு இரண்டு சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பஸ்பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ெரயில் பாஸ் வழங்கப்படும்.

இந்த தகவலை, தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் அருள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்