கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு
கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.;
பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் என்ற ஈஸ்வரன்.இவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று பேரையூர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.