வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-09-02 18:38 GMT

வாணியம்பாடி-

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடி அருகே சொரக்காயல்நத்தம் ஊராட்சி கோட்டக்கொள்ளி பகுதியில் பூங்கோதை என்பவருக்கு சொந்தமான வீட்டில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் பூங்கோதை வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிக்கும் தன்மையுடைய டெர்மினேட்டர் மற்றும் எலக்ட்ரிக் பயர்பாக்ஸ் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பாறைகளை வெடி வைத்து தகர்க்க தனது சகோதரி பூங்கோதை வீட்டில் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது,

இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்