கல்குவாரிகளில் வெடிமருந்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
கல்குவாரிகளில் வெடிமருந்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.;
பிரம்மதேசம்:
பிரம்மதேசம் பகுதியில் கல்குவாரிகளும், கிரஷர்களும் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் அவ்வப்போது விபத்து நடைபெற்று வருகிறது.
இங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. இதில் கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அறிவுரை
கூட்டத்தில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் பேசுகையில், கல்குவாரிகளில் பயன்படுத்தும் வெடி மருந்துகளை அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். கண்கானிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், வெடி மருந்துகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். கட்டிட பணிக்கான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஏற்றிச்செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடியிருக்க வேண்டும், அதிவேகமாகவும், மது குடித்துவிட்டும் லாரிகளை இயக்கக் கூடாது. போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு லாரிகளை இயக்க வேண்டும் என்றனர்.