சென்னை தீவுத்திடலில் நாளை பொருட்காட்சி தொடக்கம்...!

நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியை பார்வையிடலாம்;

Update: 2024-01-11 10:45 GMT

சென்னை,

சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி , 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, சென்னை தீவுத்திடலில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியை பார்வையிடலாம். வரும் 14-ம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியோருக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு குறைவானோர் பொருட்காட்சியை பார்க்க கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்