அரசு பள்ளியில் கண்காட்சி
சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள சவுந்தரவல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தானியவகை கண்காட்சி நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் ஒவ்வொரு மாணவர்களும் கம்பு, தினை உள்ளிட்ட நமது பாரம்பரிய தானியங்களின் வகைகளை வைத்து அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தனர். முதுகலை ஆசிரியர்கள் இளையராஜா, டயானா, சின்னதுரை, பிரகாஷ், அசோகன், லோக நாராயணன், சத்தியவதி, பட்டதாரி ஆசிரியர்கள் கோமதுரை, கோவிந்தராஜி, ஆரோக்கியலூர்துராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். தொடர்ந்து கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.