ஊரக வளர்ச்சி துறையின் கண்காட்சி அரங்கம்

ஊரக வளர்ச்சி துறையின் கண்காட்சி அரங்கத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

Update: 2022-08-12 19:03 GMT

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுதல் தொடர்பாக மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். கலெக்டர் மேகநாத ரெட்டி தேசியக்கொடி விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், போலீஸ் சூப்பிரண்டு மனோகர், திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்