அரசு பள்ளியில் நெல் விதை கண்காட்சி
செட்டியாம்பாளையம் அரசு பள்ளியில் நெல் விதை கண்காட்சி நடைபெற்றது.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நெல் விதை கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கைலாசம் தலைமை தாங்கினார். கண்காட்சியில் 65 வகையான நெல் மற்றும் 130 வகையான காய்கறி விதைகள் வைக்கப்பட்டு இருந்தன. இக்கண்காட்சியை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் கலந்து கொண்டு 65 வகையான நெல் மற்றும் 130 வகையான காய்கறி விதைகளின் பெயர்களைக் கூறி அவற்றின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தேசிய பசுமை படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை பரிமளம் நன்றி கூறினார்.