கைத்தறி ஜவுளி கண்காட்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி ஜவுளி கண்காட்சியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து நெசவாளர்களுக்கு கடன் உதவியை வழங்கினார்.

Update: 2023-08-07 16:47 GMT

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி ஜவுளி கண்காட்சியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து நெசவாளர்களுக்கு கடன் உதவியை வழங்கினார்.

கைத்தறி ஜவுளி கண்காட்சி

திருப்பூர் மாவட்ட கைத்தறி துறை சார்பில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அமைக்கப்பட்டு இருந்த ஜவுளி கண்காட்சியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறும்போது, 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடன், தனித்துவத்துடன் உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

நெசவாளர்களுக்கு கடன்

பின்னர் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காசோலை, 15 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்ட ஆணை, நெசவாளர் கூட்டுறவு சங்க 45 நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். முன்னதாக நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் பொன்கோவில் நகரில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று நடும் விழாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்