10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 863 பேருக்கு விலக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்கள் 863 பேருக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-06 17:35 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்கள் 863 பேருக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் மொழிவாரி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வு எழுத விலக்கு கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ்த் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 863 மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்களித்து உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு அரசின் 2006-ம் ஆண்டின் கட்டாய தமிழ் சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ்த் தேர்வை கட்டாயம் எழுத வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்