கடையில் தீப்பற்றியதால் பரபரப்பு

கடையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-06-06 19:25 GMT

வடகாடு:

வடகாடு அருகே உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் உள்ள மிட்டாய் கடை ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் கரும்புகை வெளியேறியது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த பேராவூரணி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். கடையில் உள்ள கியாஸ் சிலிண்டரின் வால்வு பழுது மற்றும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்