தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: தடுப்பு கற்கள் மீது ஆக்ரோஷமாக மோதிய அலைகள் - வீடியோ
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக தடுப்பு கற்கள் மீது ஆக்ரோஷமாக அலைகள் மோதியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகின்றது. எம்.ஆர்.சத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதி சீறி எழுந்தது.
அதுபோல் அரிச்சல்முனை-கம்பிப்பாடு இடைப்பட்ட பகுதியில் உள்ள தடுப்பு கற்கள் மீதும் கடல் அலையானது வேகமாக மோதி சாலை வரையிலும் தண்ணீர் வந்து செல்கின்றது.
சீற்றமாக காணப்பட்டு வரும் தனுஷ்கோடி கடல் பகுதியை அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.