மரப்பெட்டியில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு
ஏ.டி.எம். எந்திரம் அருகே மரப்பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான நடைபாதை வியாபாரிகள் பெட்டி அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய பஸ் நிலைய நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடையில் உள்ள மரப்பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த பெட்டி அருகே ஏ.டி.எம் மிஷின் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஏ.டி.எம். எந்திரம் அருகே மரப்பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.