பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.;
சென்னை,
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5 மற்றும் டீசல் ரூ.7 குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-
"மீண்டும் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், மக்கள் நலன் கருதாத எதிர்க் கட்சிகள், குறிப்பாக திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா? என தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!"
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.