காவிரி உபரிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்கிறோம் என்பதை ஏற்க முடியாது

காவிரி உபரிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று 2-வது நாள் நடைபயணத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2022-08-20 17:03 GMT

காவிரி உபரிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று 2-வது நாள் நடைபயணத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

2-வது நாள் நடைபயணம்

தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 3 நாள் நடைபயணம் அறிவித்தார். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் தனது பிரசார நடைபயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நேற்று 2-வது நாள் பிரசார நடைபயணத்தை தர்மபுரி அருகே குரும்பட்டியில் அவர் தொடங்கினார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி தலைமை தாங்கினார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் இமயவர்மன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, பசுமைத்தாயக மாநில துணைச்செயலாளர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

ஏற்க மாட்டோம்

தமிழகத்தை கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்கு அரசியலை மட்டுமே செய்துவந்தது. ஆனால் நாங்கள் அடுத்த தலைமுறை பற்றி யோசிக்கிறோம். அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்தாலே போதும். இந்த திட்டத்தை செயல்படுத்தி விடலாம். இதன் மூலம் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஆய்வு நடத்த போகிறோம் என்று தமிழக அரசு கூறுவதை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். கடந்த ஆட்சியில் கூட இதேபோன்று ஆய்வு நடத்த போகிறோம் என்றார்கள். பின்னர் திட்டத்தை கொண்டு வராமல் விட்டு விட்டனர். தற்போது தமிழக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் கடுமையான போராட்டத்தில் இறங்குவோம். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி

தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் சோலைகொட்டாய், நடுப்பட்டி, ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், சில்லாரஅள்ளி, நத்தமேடு, ஜாலியூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி ஆகிய ஊர்களில் நடை பயணத்தில் ஈடுபட்டார். பின்னர் தர்மபுரி நகரில் அரசு மருத்துவக்கல்லூரி முதல் மதிகோன்பாளையம் வரை அவர் நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். செல்லும் இடங்களில் அவர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் ஆகியோரை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, தேவேந்திரன், வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நம்பிராஜன், பெரியசாமி, மாநில இளைஞர் சங்கத் துணைத் தலைவர் சிவகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், வக்கீல் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் மணி, மாநில அமைப்பு துணைத் தலைவர் வாசு நாயுடு, சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, கொள்கை விளக்க அணி மாநில துணைச்செயலாளர் முரளி, தொகுதி அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், நகர செயலாளர் வெங்கடேசன், சத்தியமூர்த்தி, பாலக்கோடு நகர செயலாளர் ராஜசேகர், நகர தலைவர் ராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளியில் நடந்த பிரசார நடைபயண வரவேற்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. மாவட்டம் வளர்ச்சி அடையவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்புகார்த்திக், அறிவு, ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய அமைப்பு செயலாளர் குப்பன், ஒன்றிய தேர்தல் பணிக்குழு தலைவர் கல்யாண சுந்தரம், ஒன்றிய அமைப்பு தலைவர் கோவிந்தராஜு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்