பூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி பலி

சின்னமனூர் அருகே பூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி பலியானாள்.;

Update:2022-09-06 22:15 IST

கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதியின் மகள் ஹாசினி ராணி (வயது 8). இன்று ஹாசினி ராணி தனது பெற்றோருடன் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் அங்குள்ள தனது தாத்தா வீட்டின் முன்பு ஹாசினி ராணி விளையாடி கொண்டிருந்தாள்.

பின்னர் வெகுரேமாகியும் வீட்டுக்கு வராததால் அவளை தேடி பெற்றோர் வந்தனர். அப்போது வீட்டின் முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஹாசினி ராணியின் செருப்பு மிதந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பள்ளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது ஹாசினி ராணி தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தாள். இதையடுத்து பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்