அரசு பள்ளியில் ஆய்வு
அரசு பள்ளியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு மேற்கொண்டனர்
திருவெண்காட்டில், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு உட்பட்ட சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் வகுப்பறை பழுது நீக்கம், கழிவறை கட்டுதல், சுற்றுச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1½ கோடியில் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் முத்துராமன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார், பிரபாகரன், சீர்காழி நகராட்சி துணைத் தலைவர் சுப்பராயன், ஒன்றிய நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.