தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் வெறிச்சோடிய பள்ளிக்கூட வளாகங்கள்

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் வெறிச்சோடிய பள்ளிக்கூட வளாகங்கள்

Update: 2023-05-19 20:22 GMT

தமிழ்நாட்டில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகளின் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் மற்றும் செல்போன்கள் வழியாக தேர்வு முடிவுகளை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டதால் மாணவர்கள் வருகை குறைந்தே இருந்தது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும்,

ஈரோட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிக்கூடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. சில தனியார் பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்காக வந்து குவிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்