முன்னாள் ராணுவ வீரருக்கு 2 ஆண்டு ஜெயில்

முன்னாள் ராணுவ வீரருக்கு 2 ஆண்டு ஜெயில்

Update: 2022-12-05 18:45 GMT

காரைக்குடி

தேனி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 83)/ இவரது மகன் நடராஜன் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி சீனிவாசா நகரில் வசித்து வருகிறார். தனது மகனைஇ பார்ப்பதற்காக முத்தையா தேனியிலிருந்து காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். காரைக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நடராஜன் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் வீடு நோக்கி நடந்து சென்றனர். அரியக்குடி ெரயில்வே கேட் அருகே வந்தபோது, காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அருள்சாமி (வயது 58) மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருள்சாமியின் மோட்டார் சைக்கிள் முத்தையா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்தையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் அருள்சாமி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வழக்கு காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் அருள்சாமிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்