முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணியில் முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-08 10:23 GMT

ஆரணி

ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரங்கம் (வயது 60), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பொன்னுரங்கத்துக்கு 4 முறை இருதய கோளாறு ஏற்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பொன்னுரங்கம் நேற்று இரவு அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு 12.30 மணியளவில் ஜெயலட்சுமி சென்று கணவனை பார்க்கும் போது அவர் தூக்கில் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டர்ா. உடனடியாக வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்த ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்