முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

பெரியகுளம் அருகே, விஷம் குடித்து முன்னாள் ராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-01-10 15:09 GMT

பெரியகுளம் அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 55). முன்னாள் ராணுவ வீரர். தற்போது இவர், விவசாயம் செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட காமாட்சி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காமாட்சி, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்