முன்னாள் படைவீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படைவீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
நபார்டு வங்கியில் வளர்ச்சிப்பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், திறமையும் வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் https://www.nabard.orgஎன்ற இணையதளத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.