முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-24 18:45 GMT

சுரண்டை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவரது கொலைக்கு நீதி வேண்டியும் முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தின் சார்பில் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழக்கலங்கல் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் சிவனையா தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர் கோபால், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி ஜெய்ஜவான் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க துணைத்தலைவர் அந்தோணிசாமி, கவுரவ தலைவர் மணி, தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் மணி, பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்