முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-20 19:00 GMT

திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கையர் நலச்சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் விசுவாசம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் பாண்டித்துரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்