முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-06 19:50 GMT

லால்குடி:

லால்குடியில் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் லால்குடி தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொருளாளர் மூர்த்தி, துணை தலைவர் மகாதேவன், செயற்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், செல்லையா ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் நடராஜன் வரவேற்று பேசினார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும், ராணுவ சர்வீஸ் சம்பளம் வழங்குவதில் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் ஒரே சம்பளம் வழங்க வேண்டும். விதவை பென்சனையும் ஒரே மாதிரி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முப்படை வீரர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லால்குடி ரவுண்டானா பகுதியில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பில் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைப்பாளர் ஜான் மதலை முத்து ஒருங்கிணைந்தார். சங்க செயலாளர் ஜான் கென்னடி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்