தூத்துக்குடியில்முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில்முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது

Update: 2023-10-20 18:45 GMT

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்