முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2022-12-29 18:42 GMT


சிவகங்கை மாவட்ட அளவிலான முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர்.

அவைகளின் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மனுதாரர்களுக்கு உரிய பதிலினை தெரிவிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் 35 முன்னாள் படைவீரர்களுக்கு திருமண மானியம், கண் கண்ணாடி மானியம் மற்றும் கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்நலத்தறை உதவி இயக்குனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்