முன்னாள் ராணுவ வீரருக்கு கத்தியால் வெட்டு

முன்னாள் ராணுவ வீரருக்கு கத்தியால் வெட்டு;

Update: 2022-06-07 18:02 GMT

திருவட்டார்:

அருவிக்கரை தாணிவிளையைச் சேர்ந்தவர் டார்வின் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். நேற்று முன்தினம் இவர் வீட்டின் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வந்த போது கீழச்சேரிவிளையைச் சேர்ந்த வினில் (21), அனீஷ் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக டார்வினை இடிக்கும் விதத்தில் சென்றதாக தெரிகிறது.

உடனே அவர்களிடம் மெதுவாக வண்டி ஓட்டக்கூடாதா எனக்கேட்டு கண்டித்துள்ளார். இதில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு வினிலும், அனீசும் வீட்டுக்குச் சென்று விட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் 2 பேரும் ஆவேசத்துடன் வெட்டு கத்தியை எடுத்துக் கொண்டு டார்வின் வீடு நோக்கி சென்றனர். பின்னர் டார்வினை வெட்டு கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் டார்வின் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினிலை கைது செய்தனர். அனீசை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்