முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் சாவு

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலியானார்.

Update: 2022-07-01 19:38 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரசாக் (வயது 54). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திருக்கோகர்ணம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பின்னால் வந்த ரசாக், லாரியின் பின்பக்கம் மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்