எட்டயபுரம் கோவில் கொடைவிழா:பக்தர்கள் பால்குட ஊர்வலம்

எட்டயபுரம் கோவில் கொடைவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Update: 2023-08-01 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் கீழ ரத வீதி புது அம்மன் கோவில் பொங்கல் மற்றும் கொடை விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பொங்கல் கொடை விழா மற்றும் மகா கணபதி ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து புது அம்மன் குடி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. நேற்று காலையில் பால்குட ஊர்வலம் துர்க்கை அம்மந் கோவிலில் இருந்து புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்