சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம் .
சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயமாகிவிட்டார்.
கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்த குப்பையாண்டி மகன் முனியாண்டி (வயது52). நோய் பாதிப்பு ஏற்பட்டு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் திடீரென்று மாய மானார். வார்டை விட்டு வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லையாம். அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவரின் மனைவி நாகவள்ளி (51) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாத புரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.