ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்குதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மாநில, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. ரெயில் நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்படுகிறது. நடைமேடைகளிலும், ஓடும் ரெயில்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டது. அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் மாநில, மாவட்ட எல்லைகளில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.