ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-03-24 15:19 IST

ஈரோடு,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கணேசமூர்த்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் கருதி மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்