ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நியாயமாக நடத்தப்படும் - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி...!

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுத்த நடவடிக்கையை எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-16 08:02 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி நேர்மையாக , நியாயமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்தது.

மேலும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , தங்களால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்வதாகவும் , இரட்டை பதிவு உள்ளவர்களின் பட்டியல் சம்பத்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . தேர்தல் பணிக்கு 409 சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .என தகவல் தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து  இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுத்த நடவடிக்கையை எழுத்துபூரவமாக 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்