ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து

ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து

Update: 2023-07-13 23:32 GMT

ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தலைவராக விஜயகுமார், பொதுச்செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, செயலாளராக மாது என்கிற மாதையன், பொருளாளராக சின்னசாமி, துணைத்தலைவராக நல்லசாமி, இணைச்செயலாளர்களாக வீரமணி, செல்வம், இணை பொருளாளராக பூங்கொடி சிவகாமி, துணைச்செயலாளர்களாக செல்வம், ஆறுமுகம், வரதன், துணை பொதுச்செயலாளராக ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமையில், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்