தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆயுதப்படை வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருள் ஒழிப்பு சம்பந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைவிட தற்போது சாலை விபத்துக்கள் ஓரளவுக்கு குறைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவிதமான குற்றங்களும் இல்லாத கிராமங்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். தூத்துக்குடிமாவட்டத்தில் கஞ்சாவை பொருத்தவரை 5 கிராம், 10 கிராம் என்ற அளவிலே தற்போது பிடிபட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை பெருமளவில் குறைந்து விட்டது. கஞ்சா விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்' என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், உதவி ஆணையர் (கலால்) அபுல்காசிம், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்