மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்

நெடுங்குணம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2022-09-22 12:11 GMT

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியை ஷீலா, பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வசித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் இசையருவி வரவேற்றார்.

இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் 30 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார்.

30 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த உபகரணங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்