அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செங்கோட்டை மேலூர் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியா் சங்க துணைத்தலைவா் மல்லிகா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி வார்டு துணைத்தலைவா் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியா் நாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னா் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.) இசக்கிதுரைபாண்டியன் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் கருப்பசாமிநாதன் நன்றி கூறினார்.