திருநங்கைகள்-நரிக்குறவர்கள் நடத்திய சமத்துவ பொங்கல் விழா
திருநங்கைகள்-நரிக்குறவர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா நடத்தினர்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் கலையரங்க வளாகத்தில் திருநங்கைகள்-நரிக்குறவர்கள் சார்பில் புகையில்லா பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருநங்கைகள் மற்றும் நரி குறவர் சமுதாயத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்தார். விழாவையொட்டி கோலப்போட்டி, இசை நிகழ்ச்சி, மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.