சமத்துவ பொங்கல் விழா

வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-01-12 18:12 GMT

வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பானையில் பொங்கல் வைத்து, கரும்பு வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் ஏ.கே.முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், தி.மு.க. பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்