கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே திருமலாபுரம் சக்ஸஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்பினையும், உழவர்களின் உழைப்பை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர்.
பள்ளியின் தாளாளரும், முதல்வருமான முதல்வர் நாகராஜன் மாணவர்களுக்கான போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் நாகராஜன் பரிசுகளை வழங்கினார்.