வேலூரில் சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
வேலூரில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி வேலூர் மண்டலம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் சசிகுமார், வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பழனி, திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சங்கர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் மற்றும் பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் குட்கா, கஞ்சா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும். மது ஆலைகளை மூடிவிட்டு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.